ஓம் மன்னனி வென்னனி மங்கை சிவகாமி நீ ஓம் என்ற அட்சரத்தை உச்சித்த ஆயி நீ ஓம் இரவும் நீ பகலும் நீ ஓம் ஓம்கார காளியே பூங்காவின் நிழலுறை ஓம்கார சக்தியே பூங்காவனத்து பெரிய நாயகியே !
ஹரி பிரமாதியர் தேடுதற்கரிய அன்னபூரணி சதாநந்தி அந்தரி கௌரி சுந்தரி அகோரி அம்பிகை துறந்தரி மாரி திரிபுரதகனி மகுடாசூர சங்காரி ! திங்கள் செஞ்சடச்சி இங்கித நடச்சி ! செங்கன் மீனான செம்படச்சி ,சொருகோந்தலசஷி தூங்கமா மறை துடையிடைச்சி விபூதி ருத்திராசஷி! மருமலர்சோலை வரநதி சூழம் வாழ்ந்திடும் வாலிமா நகரில் பூஜித்த , வலி நாயகரை மருவிய மத்தியார்ஜுனத்தில் வாழும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே !