amman kovil
Slide 1

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

திருவிடைமருதூர், தஞ்சாவூர்.

Slide 2
Slide 3
Amman Banner(5)
Amman Banner(4)
previous arrow
next arrow
Sri AngalaParameswari amman (12)

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறிமுகம்

சிவபெருமானுடய திருனடனதின் காட்சியாகவும், சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு, அருள்பாளிக்கும் சக்தியாகவும் இருப்பதால் இந்த தேவி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி என அழைக்கபடுவதாக கூறுவர். சிவனும் பார்வதியும் உலகம் உய்ய வளம் வரும் போது அடர்ந்த காட்டையும், ஆழமான ஆற்றையும் கடக்க வேண்டியிருந்த பொழுது சிவபெருமான் ஆற்று சுழலில் கால் வைத்த போது பார்வதி அங்கு ஆழம் என்று எச்சரிக்கை செய்தததாகவும் அதனால் இந்த தேவியை அங்காளம்மன் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பிறகாரா தெய்வங்கள்

பாலவிநாயகர்
களவிகரணி
விஷ்ணுதுர்கை
ரௌவுத்திரி

அம்மன் வழிபாடு

இவ்வாலயத்தில் தினமும் நித்ய பூஜை கட்டளை (நித்யபிஷேகம்) அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அம்பாளை வழிபடுவதால் திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குகிறது, தீயசக்திகளின் சீற்றம் குறைகிறது, அனைத்து தோஷங்களும் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது

திருவிழா காலங்களில் காப்பு கட்டிக்கொண்டு, அலகு காவடி போட்டுகொண்டு ஆடி பாடி வருகின்றனர்.

 

“எந்நாட்டிலும் நன்நாடாய் விளங்கும் சோழவள நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புடைய, இறையருள் உறைகின்ற காசிக்கு இணையான ஸ்தலமாக விளங்கும், சம்மந்தர், மாணிக்கவாசகர், திருநாவுகரசர், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் போன்ற அருளாளர்களால் பாடி பரவி வழிபட்ட மத்யார்ச்சுன எனும் திருவிடைமருதூரில் ஸ்ரீ ஜோதிமஹாலிங்கப் பெருமான் ஆலயத்திற்கு மேற்கு கன்னிபாகதில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் பன்னெடுகாலமாக பரிவார தெய்வங்களுடன் திருக்கோயில்கொண்டு வேண்டிய வரங்களை வழங்கி வருகிறாள். கும்பகோணம் கிழக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில் 9 கி.மீ தொலைவில் தாலுக்கா அலுவலகம் எதிர்புறம் திருவிடைமருதூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருகோயில் அமைந்துள்ளது. சதிர்யுகத்தில் ஆதி கிரேதாயுகதிருக்கு முன்னர் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷத்தை நீக்கும் பொருட்டு, கலியுக மாந்தர்க்கு அருள்பாளிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு புற்றுருவாக திரு அவதாரம் செய்து அங்காளபரமேஸ்வரி அம்மனாக எழுந்தருளிய தலைமை ஸ்தலம்தான் மேல்மலையனுர் ஆகும்.இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரிஅகிலமெல்லாம் அருளாட்சி செயவதற்காகவே பல்வேறு ஊர்களிலும் கோயில் கொண்டுள்ளாள்.”

செயல்பாடுகள்

வருடா வருடம் மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்தசியன்று மஹா சிவராத்திரி திருவிழா பாரம்பரிய முறையில் கொடியேற்றம். சக்தி ககரகம், அக்னி கொப்பரை, மயான கொள்ளை போன்ற நிகழ்வுடன் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் மிகபெரியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. சிவபெருமான் மாசி மாதம் அம்மாவாசைக்கு முதல் நாள் மயானம் வந்து தங்கியதால் அன்றைய தினமே சிவன்ராத்திரி என்று வழக்கத்தில் சொல்வார்கள்.

அன்றுதான் சிவனுக்கு பிடித்த பிரமஹத்தி தோஷம் விலகியது என்பதை நினைவு கூறவே அதனை அடிப்படையாக கொண்டே இத்திருவிழா சிறப்பாக இன்றும் நடைபெற்று வருவது ஒரு சிறப்பம்சமாகும். ஸ்ரீ அம்பாள் உற்சவர் அலங்காரத்துடன் திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் பவனியாக ஊர்வலம், மேளம், தாரை, தப்பட்டை, வானவெடி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் செய்யப்படுகிறது.

ஆலய வழிபாட்டிற்குறிய நேரம்

காலை 7.00 மணி முதல் – மதியம் 1.00 வரை
மாலை 4.00 மணி முதல் – இரவு 8.30 மணி வரை

பரிவார தெய்வங்கள்

இருளப்பன்
காட்டேரி
பாவாடைராயன்
பத்ரகாளி
அகோர வீரபத்திரர்
ஸ்ரீ நாகதேவி
பேச்சாயி
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அனைவரும் வருக அம்பாளின் அருளை பெறுக, என்றென்றும் அம்பாளின் சேவையில்

For Advertisment Contact

பரம்பரை ஸ்தானிகர்கள்
C. கமலாகரன் B.Sc.., S.மகாலிங்கம் B.A..,

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்

தொலைபேசி

+91 9944015536

இடம்

தாலுக்கா அலுவலகம் எதிர்புறம், திருவிடைமருதூர் - 612 104, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா.

மின்னஞ்சல்

ckamalakaran@gmail.com