ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்
திருவிடைமருதூர், தஞ்சாவூர்.
ஸ்ரீ அங்காளம்மன் வரலாறு
தாண்டவ ஈஸ்வரியே தாட்சாயிணி தேவியருள் கோபத்தின் சீற்றத்தாலே அங்காளியாய் ஆனவளே உயிரென்று தோற்றத்தாளே, பார்வதியாய் தோன்றிட்டாளே. அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே. சக்தியின் வடிவமாக பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பாக கலியுகம், துவாபாராக, திரேதா, கிரேதா யுகத்திற்கு முன்பாக மணியுகத்தை ஆட்சி செய்து வந்த ஏகஜோதிதான் ஆதிசக்தியாகும். சக்தியின் மணிமந்திரத்தால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளால் ஆகிய ஐந்து தொழில்களும் முறையாக பிரம்மா, விஷ்ணு, உருத்தத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களை படைத்தது ஆதிசக்தியாகும் . இதன் மூலம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளும் ஐந்துவித அனைத்துச் செயல்களையும் செய்வதற்குரிய சக்திகளான இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளும் மும்மூர்த்திகளாகவும். வலது பக்கம் ஆண் என்றும் இடது பாகம் பெண் என்றுமாகி இரண்டும்
இணையும்போது உண்டான பஞ்ச பூதங்களே பலவகை உருவங்களில் உலகெங்கும் நிறைந்ததாகவும், சிவனுக்கு ஈஸ்வரியும், விஷுணுவுக்கு லட்சுமியும், பிரம்மாவுக்கு சரஸ்வதியும், சக்தி துணைவியாக அமைந்தனர். படைப்பு தொழிலான பிரம்மா தனுக்கு உதவியாக இருக்க 10 பிரஜாதிபதிகளைப் படைத்தார். இவர்களில் முக்கியமானவர் தக்கன். ஏக சக்ரவர்த்தியான தக்கன் கோடான கோடி உயிர்களையும், முனிவர்களையும் படைத்தார். மேலும் 60 அழகுப் பெண்களை படைத்து தேவர்களும் மணம் முடித்தும் இந்த வகையில் ஆதிபராசக்தியின் அம்சமாக விளங்கிய தாட்சாயிணி என்ற பெண்ணை பரமசிவனுக்கு மணம் முடித்தார். சிவனுக்கே மாமனார் ஆகிவிட்ட தக்கன் பேராற்றலை பெறவிரும்பி மகாயாகம் நடத்தினார். அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்கவில்லை. ஆணவம் கொண்ட தந்தை தக்கனை அடக்க தாட்சாயிணி சிவன் தடுத்தும் கேளாமல், சக்தி அம்சத்தை சிவனிடம் நிலையாக நிறுத்திவிட்டு மாய உருவில் தாட்சாயிணி தக்கன் யாகத்திற்கு சென்றால் சிவனை அழைக்காத தவற்றைச் சுட்டிக் காட்டிய தாட்சாயிணியை தக்கன் பழித்துப் பேசி அவமானப்படுத்தினான். தக்கனின் மமதை, திமிர், ஆணவம், கண்டு ஆவேசம் கொண்ட மாயையான தாட்சாயிணி அகோர உருவம் கொண்டு ஆங்கார சக்தியாகித் தக்கனையும், யாகத்தையும் அழித்தாள். பின்னர் தாட்சயினியின் பூத உடல் யாகத்தில் வீழ்ந்து கருகி அழிந்தது. உருவமற்ற அவதாரமாக நிலைத்து நின்றது. சக்தியின் அம்சம், இதை அறிந்த அறிந்த சிவபெருமான் பெரும் கோபம் கொண்டு தாட்சாயிணியின் கருகிய உடலை எடுத்து தன் தோள் மேல் போட்டுக்கொண்டு ஆவேசத்தில் ஆங்கார நடனம் ஆடினார். அவ்வாறு ஆடும்போது தாட்சாயிணியின் உடல் உறுப்புகள் அகிலமெங்கும் வீழ்ந்தன. சிதைந்து வீழ்ந்த இடங்களே தற்போது நாம் வணங்கும் மகிமை மிக்க சக்தி பீடங்களாக உள்ளன. இப்படி உருவமற்ற அங்காளியாக ஆவேசம் கொண்டு, அங்காளி சக்தி சிவபெருமானிடம் விட்டு வந்த ஆதிபராசக்தியின் அம்சத்துடன் இணைவதற்காகவே பர்வதராஜன் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரோடு வளர்ந்து பின்னர் பரமேஸ்வரனையே மணந்தார். பார்வதி மூலம் ஐந்து மணி மந்திரங்களை அறிந்து பஞ்சமுக மந்திரத்தை உச்சரித்து பஞ்சமுக சிவனிடத்தில் அனைவரும் வேண்டிய வரம் பெற்றாலும்,நான்முகம் கொண்ட பிரம்மனும் எனக்கும் ஐந்து தலை வேண்டும் என்ற வரத்தை கேட்டு பெற்றுக்கொண்டு, பிரம்மா சிவனுக்கு சமமாக அகங்காரத்தோடு சந்தோபி, சந்தரர் என்ற இரண்டு அரக்கர்களின் கொடுமைகளில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற வேள்வி ஒன்றை பிரம்மன் நடத்தினார். அந்த யாகத்தின் மூலம் திலோத்தமை என்ற தேவமங்கை தோன்றினாள். திலோத்தமையின் பேரழகில் மயங்கிய அசுரர் கூட்டம் அவள் பின்னே சென்றது. திலோத்தமையின் வடிவழகில் பிரம்மாவும் மயங்கினார். அதனால் திலோத்தமையை தேடி கைலாசம் சென்றாள்.பிரம்மாவும் விடாது கையாலயத்திற்கு சென்றார். ஐந்து தலைகளுடன் எதிர் வருபவர் பரமசிவன்தான் எனக் கருதி
பார்வதி பிரம்மாவின் பாதங்களில் வணங்கினார். பிரம்மாவும் விடாது கையாலயத்திற்கு சென்றார். ஐந்து தலைகளுடன் எதிர் வருபவர் பரமசிவன்தான் எனக் கருதி பார்வதி பிரம்மாவின் பாதங்களில் வணங்கினார். அந்த நேரத்தில் சிவனும் ஐந்து தலையுடன் அங்கு வந்தார். பார்வதி குழப்பம் கொண்டு வந்தவர் பிரம்மாதான் என்று அறிந்து கடுங்கோபம் கொண்டாள். பார்வதி தேவி சிவனைப் பார்த்து ஐந்து தலை உள்ளதால்தானே இந்த தவறு நடந்துவிட்டது ஆகவே பிரம்மாவின் ஐந்தாவது தலை அழிய வேண்டும் என்று பார்வதி பரமசிவனிடம் முறையிட்டார். பார்வதியின் அண்ணனான விஷுனுவின் யோசனைப்படி பிரம்மனிடம் வலிய சண்டைக்குச் சென்றார் சிவபெருமான். சண்டையில் பிரம்மனின் ஒரு தலை தன் சூலாயுதத்தால் வெட்டி எறிந்தார். கீழே தலை விழுந்தாலும் ஐந்தாவது தலை பிரம்மனுக்கு மீண்டும் மீண்டும் வெட்ட வெட்ட உருவாகிக்கொண்டு வந்த வண்ணமாக
இருந்தது. இப்படி பிரம்மனின் 999 தலைகள் விழிந்துவிட்டன. சிவனும் களைத்துவிட்டார். விஷ்ணுவின் யோசனைப்படி கீழே விழுந்த தலைகளையும் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிந்துகொண்ட சிவன் மீண்டும் ஒரு முறை பிரம்மாவின் தலையை அறுத்தார். ஆனால் சிவபெருமான் அந்த தலையை கீழே போடவில்லை. பிரம்மாவிற்கு புதியதாக தலையும் முளைக்கவில்லை. முன்பு போல நான்கு தலைகள் மட்டும் இருந்தன. இதனால் சிவனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. பிரம்மனின் துணைவியான சரஸ்வதி பிரம்மனின் அலங்கோலம் கண்டு கோபப்பட்டு சிவபெருமானும் சாபம் கொடுக்கிறாள். என் கணவரின் ஐந்தாவது தலை உன் கையைவிட்டு கீழே விழாமல் அங்கேயே இருக்கட்டும். அன்ன , ஆகாரம், படுக்கை, தூக்கம் எதுவும் இல்லாமல் போகட்டும். சுடுகாட்டின் மூன்று பிடி சாம்பல்தான் பசி தீர்க்கும். பிணத்தின் முட்டி எலும்புதான் தாகம் தீர்க்கும் என்று சாபம் இட்டதால் சிவன் உலங்கமெங்கும் அலைந்து திரிந்து வந்தார். அத்துடன் சரஸ்வதியின் கோபம் தீர்ந்தது மட்டுமில்லாமல் பார்வதிக்கும் சாபம் இடுகிறாள். எனது கணவர் அலங்கோலமாக இருப்பதுற்கு காரணமான நீயும் அலங்கோலமாக போவாய். உனக்கு அழகிய உடையின்றி, கொக்கின் சிறகும், மயில் தோகையும் இனி உடை, உனது தாதி பெண்கள் பூத கணங்களாக மாறுவார்கள். உனக்கு பிணங்களும், மது,மாமிசம்தான். மேலும் நீ அகோர உருவம் தாங்கி அலைய வேண்டும் என்று சாபம் இட்டாள் சரஸ்வதி. இவையனைத்தும் தெரிந்துகொண்ட மஹாவிஷ்ணு கலைவாணியின் சாபவிமோஷனத்தை மோஹினி உருவில் வந்து அறிந்துகொள்கிறார். அதன்படி பார்வதிக்கு மலையரசன் என்ற பட்டணத்தில் மலையனூரில் பூங்காவனத்தில் புற்றில் பாம்பு உருவாக இருக்கும்போது சாப விமோசனம் முடியும் என்று கூறிவிட்டு மஹாவிஷ்ணு மறைந்துவிட்டார். சரஸ்வதியின் சாபப்படி பார்வதிதேவி அகோர உருவத்தோடு, நீண்ட ஜடாமுடி தரித்து உருமாறி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலைக்கு வந்தபோது அங்கே கபிலமாஹா முனிவர் பார்வதி தேவிக்கு சில விபரங்கள் கூற அதன்படி திருவண்ணாமலையில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் பார்வதிதேவி மூழ்கி எழுந்த பின்னர் அகோர உருவம் நீங்கி மூதாட்டி உருவம் பெற்றார். பூத கணங்களும் பழையபடி பெண்களாயினர். அதோடு பார்வதி மலையனூருக்கு வந்து மீனவர்களிடத்தில் தான் யார், எதற்காக இங்கு வந்துள்ளேன் என கூறிவிட்டு அவர்களின் பூஜைகளையும் ஏற்றாள். இதன்பின் பூங்காவனத்தில் மிகப்பெரிய புற்றாக உருவெடுத்து உள்ளே ஐந்து தலை நாகமாக உட்கார்ந்த வடிவத்தில் அன்னை அங்காளம்மன் புற்றுருவாக அமர்ந்தாள். இதை அறிந்த சிவன் மேல்மலையனூர் வந்தடைந்தார். அங்கு மயானத்தில் 3 பிடி சாம்பல் சாப்பிடுகிறார். அவரது பித்தம்,பசி ஓரளவு நீங்குகிறது. அதன் பிறகு புற்றுமுன் நின்று அன்னதான பிட்சை இடுங்கள் என்று கூறினார். சிவனுடைய குரலைக்கேட்ட பார்வதிதேவி மகிழ்ந்து தன் அண்ணன் விஷுனுவை நினைக்க அவர் உபதேசம் செய்தார். பார்வதி உன் கணவனுக்கு எதை கொடுத்தாலும்
அவரது கைகளில் உள்ள பிரம்ம கபாலம் தின்றுவிடும். ஆதலால் மிக ருசியான முறையில் உணவைச்சமைத்து அதை 3 கவளமாக்கி அதில் முதல் 2 கவளத்தை கபாலத்தில் போடவேண்டும். மூன்றாவது கவளத்தை கபாலத்தில் போடுவதுபோல் பாவனை செய்து அதை கைத்தவறி கீழே போட்டு விடுவது போல் தரையில் சிதறிவிடவேண்டும் என்றும்,அப்போது உணவின் ருசியை கண்டு பிரம்ம கபாலம் சிவனின் கையைவிட்டு கீழே இறங்கி செல்லும்போது நீர் பெரிய உருவம் எடுத்து அந்த பிரம்ம கபாலத்தை காலால் நசுக்கிவிடவேண்டும். அந்த நேரத்தில் சிவனை பிடித்த பிரம்ம தோஷம் நீங்கிவிடும். நீ சாதம் சமைக்க லட்சிமியும் அவளிடம் உள்ள அமுத சுரபி பாத்திரமும் உதவியாக இருக்கும் என்று சொல்லி மறைத்தார் மஹாவிஷ்ணு. பார்வதிதேவி அண்ணனின் வாக்குப்படி லட்சுமிதேவியின் உதவியுடன் சாதம் தயார் செய்தார். பார்வதி தன் மூத்த மகனான விநாயகரை அழைத்து
வந்திருப்பது உனது தந்தை ஆகவே அவரை வரவேற்று இங்குள்ள அக்னி குளத்தில் குளிக்கச்செய்து பின் சாப்பாடு போடும் வரை எங்கும் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடவும், அதன்படி விநாயகப்பெருமான் தன் தந்தையை கவனித்து பார்த்து கொண்டிருந்தார். குளித்து வந்த சிவனுக்கு அங்காளம்மன் பாத பூஜை செய்து சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் முதல் கவள சாதத்தைப் போட்டார் உடனே அதை கபாலம் சாப்பிட்டுவிட்டது அதேபோன்று இரண்டாவது கவளம் போட்டபோதும் கபாலம் அதையும் தின்றுவிட்டது. ருசியான மூன்றாவது கவளத்தையும் உண்டுவிட ஆவலுடன் காத்திருந்த பிரம்ம கபாலம் அங்காளம்மன் மூன்றாவது கவளத்தை போடுவது போல் பாவனை செய்து கவள சோற்றை தரையில் இரைத்து விட்டாள். ருசிகண்ட பிரம்ம கபாலம் தரையில் சிதறிய அன்னத்தை எடுக்க சிவன் கையை விட்டு தரைக்கு இறங்கியது. இதை எதிர் பார்த்த அன்னை அங்காளபரமேஸ்வரியாக அகோரா உருவம் எடுத்து ஆங்காரத்துடன் தனது வலது காலில் பிரம்ம கபாலத்தை மிதித்து கொண்டாள். அலறிய பிரம்ம கபாலத்தை தன் காலால் நசுக்கி இனி நீ என் காலடியில் இருக்க வேண்டும் என கூறியவுடன் அன்னையின் காலில் கட்டுண்டு உள்ளது. சிவனை பிடித்த பிரம்மகத்தி தோஷம் நீங்கிவிட்டதால் சிவன் சுயநினைவு பெற்று பேரானந்தம் கொண்டு சிதம்பரம் சென்றடைந்து ஆனந்த தாண்டவம் ஆடியதால் சிவனுக்கு தாண்டேஸ்வரர் என்றும், அம்மனுக்கு தாண்டேஸ்வரி என்றும் பெயர்கள் வந்ததாக கூறுவர். பிரமனின் சிரசை மிதித்த அங்காளிக்கு கோபம் தணியவில்லை. ஆதலால் அம்பாளை தேரில் பவனி வரச்செய்து அமைதிபெற வேண்டி தேவர்களும்,ரிஷிகளும், முனிவர்களும் தருக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், சிம்மாசனமாகவும் மாறி அதில் அமர்ந்து பவனி வரவேண்டினார். கோபம் தனிந்த அன்னையும் தனது சொந்த உருவம் எடுத்து தேரில் அமர்ந்து பவனி வந்தாள். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அங்காளபரமேஸ்வரி அனைத்துலக நன்மைக்காக ஆங்காங்கே கோயில் கொண்டதில் திருவிடைமருதூரும் ஒன்றாகும்.இவ்வூர் காசிக்கு சமமான ஸ்தலம் என்றும் மத்தியார்ச்சுன க்ஷேத்ரம் என்றும், தேரோடும் வீதியழகு உடையது என்றும் போற்றப்படும். காவேரி நதி நீர் பாயும் திருவிடைமருதூரில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அனைத்து பரிவார தெய்வங்களுடன் அமர்ந்து பாரம்பரியமாக முத்தரைய இனத்தவர்கள் பூசர்களாக இருந்துகொண்டு செய்துவரும் பூஜைகளை ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.
போற்றி..! போற்றி..!
பரம்பரை ஸ்தானிகர்கள்
C. கமலாகரன் B.Sc.., S.மகாலிங்கம் B.A..,
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
தொலைபேசி
இடம்
தாலுக்கா அலுவலகம் எதிர்புறம், திருவிடைமருதூர் - 612 104, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா.